உலக அளவில் ஊடகச் சுதந்திரத்தைக் கண்காணித்து வரும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஐநா மனித உரிமை மன்ற(யுஎன்எச்ஆர்சி)த்தில் தாக்கல் செய்த அதன் அறிக்கையில் சர்ச்சைக்குரிய 2018 பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டத்தையும் சேர்த்துக் கொண்டிருக்கிறது.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், யுஎன்எச்ஆர்சி-இன் கடந்த காலப் பரிந்துரைகளைப் புறக்கணித்து விட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்ட அந்த அமைப்பு, கடந்த ஐந்தாண்டுகளில் மலேசியப் பத்திரிகைச் சுதந்திரம் கவலையளிக்கும் வகையில் சரிவு கண்டு வந்துள்ளதாகக் கூறியது.
“மனித உரிமைகள் மன்றத்தின் பரிந்துரைகளைக் கருத்தில் கொள்ளாமல், நஜிப்பும் அவரது அரசாங்கமும் 2018 பொதுத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் சுதந்திரமாக செயல்படும் ஊடகங்களுக்கு அதிக தொந்திரவு கொடுத்து வருகின்றனர்”, என ஆர்எஸ்எப் அதன் அறிக்கையில் கூறியது.
“அதற்கான அண்மைய எடுக்காட்டு கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டம்”, என்று அது கூறிற்று.