கொசுக்கடி சில வேளைகளில் உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடாலாம் என்று எச்சரிக்கிறார் முன்னாள் அமைச்சர் ரபிடா அசிஸ்.
“பெர்சத்து கட்சியைக் கொசுக் கட்சி என்று குறிப்பிட்டவருக்குச் சொல்லிக் கொள்கிறேன். ஒரு வகை கொசுவால் மரணமே நேரலாம்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அவர் யாருடைய பெயரையும் கூறவில்லை ஆனால், சுற்றுலா, பண்பாடு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீசைத்தான் குறிப்பிடுகிறார் என்பது வெள்ளிடைமலை.
நஸ்ரி பெர்சத்து கட்சி பற்றிக் குறிப்பிட்டபோது அதைக் “கொசுக்கட்சி” என்று சொன்னார்.
“கொசு கடித்தால் என்ன செய்வோம். சொறிந்துவிட்டுப் பேசாமல் போய்க்கொண்டே இருப்போம். சொறிவது சுகமாகக்கூட இருக்கும்”, என்று கிண்டலடித்தார்.
அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தலைலாமாவின் பொன்மொழி ஒன்றை எடுத்துக் கூறினார்: “சிறியது பெரிதாக எதையும் செய்து விடாது என்று நினைத்தால் ஒரு கொசுவுடன் படுத்துறங்கிப் பாருங்கள்”.
அரசியல்வாதிகளுக்கு ஆணவம் கூடாது என்றும் ரபிடா அறிவுறுத்தினார்.
இவர் டெங்கி கொசு