இருபது ஆண்டுகளுக்கு முன்பு மகாதிர் முகமட்டும் அன்வார் இப்ராகிமும் விரோதிகள்.
ஆனால், எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் அவர்களுக்கிடையில் புதிய உறவு மலர்ந்துள்ளது. அன்வாரின் பிகேஆர் கட்சி சின்னத்தின் கீழ் மகாதிர் போட்டியிடவிருக்கிறார்.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியை மன்றங்கள் பதிவகம் (ரோஸ்) பதிவு செய்யாததைத் தொடர்ந்து பிகேஆரின் சின்னம் “கண்” பக்கத்தான் ஹரப்பானின் பொதுச் சின்னமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாட்டின் அடிப்படையில், டிஎபியின் ரோக்கெட் சின்னமும் மேற்கு மலேசியாவில் தேர்தலின் போது பயன்படுத்தப்பட மாட்டாது.
இந்த முடிவை இன்று மகாதிர் அறிவித்தார். நடக்க முடியாத ஒன்று இன்று நடந்துள்ளது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாக கூறிய மகாதிர், ஹரப்பான், பெர்சத்து உட்பட, பிகேஆரின் சின்னத்தை பகிர்ந்து கொள்ளும் என்று மலேசியாவுக்கும் உலகிற்கும் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.