தேர்தல் ஆணையம்(இசி) நேற்றிரவு விடுத்த ஓர் அறிக்கையில் பொதுத் தேர்தலில் யாரேனும் பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்த நினைத்தால் அவர்கள் இசி-இன் அனுமதி பெற வேண்டும் என்று சொல்லவே இல்லை எனக் கூறியது.
பக்கத்தான் ஹரப்பான் சின்னத்தை 14வது பொதுத் தேர்தலில் பயன்படுத்த முடியாது ஏனென்றால், அக்கூட்டணி சங்கப் பதிவகத்தில் பதிவு செய்யப்படவில்லை, அதன் சின்னம் இசியில் பதிவு செய்யப்படவில்லை என இசி தலைவர் முகம்மட் ஹஷிம் அப்துல்லா கூறினார்.
இசி செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை அவர் தெளிவு படுத்தினார்.
“அச் செய்தியாளர் கூட்டத்தில் ஒரு வேட்பாளர் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் பரப்புரைகளின்போது அந்தக் கட்சியின் சின்னத்தை மட்டுமே பயன்படுத்த முடியும் மற்ற கட்சிகளின்- டிஏபி, அமனா, பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து) ஆகியவற்றின் சின்னங்களைப் பயன்படுத்த முடியாது என்றுதான் கூறப்பட்டது,” என்றாரவர்.
அச்செய்தி இசி என்னமோ மற்ற கட்சிக்காரர்கள் பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்துவடஹ்ற்கு இசி அனுமதி பெற வேண்டும் என்று கூறியதாக திரித்துக் கூறிவிட்டார்கள் என்றாரவர்.