பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ரிம1ட்ரில்லியன் தேவைப்படும். பொருள், சேவை வரியை இரத்துச் செய்யப்போவதாகக் கூறும் ஹரப்பான் வாக்குறுதிகளை நிறைவேற்ற பணத்துக்கு என்ன செய்யும் என்று பிரதமர் நஜிப் ஏற்கனவே கிண்டலடித்திருந்தார்.
அதையே இப்போது டாக்டர் மகாதிர் முகம்மட், பிஎன் தேர்தல் அறிக்கை விசயத்தில் திருப்பிக் கேட்டிருக்கிறார்.
“அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் திட்டங்களுக்கு ரிம300 பில்லியன் தேவைப்படும். ரிம300 பில்லியனை எங்கிருந்து பெறப் போகிறார்கள்?
“உங்களிடம்(நஜிப்பிடம்) மருத்துவமனைகளின் மருந்துக்கும் மாணவர் உதவிச் சம்பளங்களுக்கும் கொடுப்பதற்குக்கூட பணம் இல்லையே”, என்று ஹரப்பான் தலைவர் நேற்றிரவு மூவாரில் ஒரு செராமாவில் பேசியபோது கேலி செய்தார்.
ரிம300 பில்லியன் தேவைப்படும் என்ற தகவல் மகாதிருக்கு எங்கிருந்து கிடைத்தது என்பது தெரியவில்லை.
பிஎன் தேர்தல் அறிக்கையில் மகளிர் நிலை உயர்த்தப்படும் என்று கூறப்பட்டிருப்பதையும் ஹரப்பான் பிரதமர் வேட்பாளர் கிண்டல் செய்தார்.
“நாங்கள் அப்படியெல்லாம் சொல்ல மாட்டோம். எங்கள் துணைப் பிரதமர் வேட்பாளரே ஒரு பெண்தான்(பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில்)”, என மகாதிர் கூறினார்.
மக்களிடம் இருந்துதான் பெறப்படும். நாங்கள்தானே நஜிப் அரசாங்கத்தின் பணம் காய்க்கும் மரங்கள்!