ஜிஇ14 : ஜொகூர் பாரிசான் தேர்தல் அறிக்கையில் மகளிர் மீதும் கவனம்

இம்மாத பிற்பகுதியில் வெளியிட அட்டவணை இடப்பட்டுள்ள ஜொகூர் பாரிசான் நேஷனல் தேர்தல் அறிக்கையின் பிரதான மையமாக பெண்களுக்கும் இருக்கின்றனர்.

மகளிரோடு, ஃபெல்டா குடியேற்றவாசிகள், சிறப்பு ………… மற்றும் இளைஞர்களுக்கும் இம்முறை அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக, ஜொகூர் மாநில பிஎன் தலைவர் முகமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

“ஜொகூர் பெண்கள் வர்த்தகத்தில் சிறந்து விளங்க, பிரதமரிடமிருந்து RM4 மில்லியன் ஒதுக்கீடு வாங்கி, பாசீர் கூடாங் பகுதியில் ஒரு வளாகத்தை அமைத்து, அதில் பெண்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.

அதுமட்டுமின்றி, பாண்டான் ஓய்வு & பராமரிப்பு (ஆர் & ஆர்) பகுதியைப் பெண்களுக்கான வணிக மையமாக அமைத்து கொடுக்கவும் திட்டமுள்ளது என்று, இன்று தாமான் மாவார், ஜொகூர் பாருவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் முடிந்ததும், மத்திய அரசிடம் உதவி கேட்டு விண்ணப்பிக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாரிசானின் மாநில மற்றும் மத்திய அரசாங்கத் தேர்தல் அறிக்கைகள் எப்போதுமே தாய்மார்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவே இருக்கும் என்றும் காலிட் நோர்டின் கூறினார்.

முன்னதாக, மாநிலப் பெண்களுக்கு ரிம154 மில்லியன் கடனுதவியை ஏ.ஐ.எம். வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த சிறு கடனுதவி திட்டம், பெண்கள் சுயதொழிலில் ஈடுபட உதவியாகவும், ஊக்குவிப்பாகவும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

-பெர்னாமா