எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானின் தலைவர் டாக்டர் மகாதிர் முகமட் லங்காவியில் போட்டியிடப் போவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அந்த முன்னாள் பிரதமருடன் 22 ஆண்டுகள் நெருங்கியத் தொடர்புடைய ஒருவர், சற்று முன்னர் இதனை மலேசியாகினியிடம் உறுதிபடுத்தினார்.
“இதற்கு முன்னர், குபாங் பாசு மற்றும் புத்ரா ஜெயா நாற்காலிகளுக்குக் குறிவைத்திருந்த போதும், இறுதியில் லங்காவி முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
இந்த முடிவு கடந்த வாரம் எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
லங்காவி தற்போது பாரிசானின் கைவசம் உள்ளது. கடந்த தேர்தலில், 91 விழுக்காடு மலாய் வாக்காளர்களைக் கொண்ட அந்த நாற்காலியை, 11,861 வாக்குகள் வித்தியாசத்தில், நவாவி அஹ்மாட் பிகேஆருடன் போட்டியிட்டு வென்றார்.
இம்முறை மகாதிர் பிகேஆர் சின்னத்திலேயே அங்கு களமிறங்க உள்ளார்.
வெற்றி நிச்சயம்.
அங்குள்ள அமீனோ உறுப்பினர் சொன்னது. மகாதீர் அங்கே நின்றால் எனது ஓட்டு மகாதீருக்கே. சொன்னவர் அரசாங்க ஊழியர்.