பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் ‘கிளிங்’ ‘போடா’ என்னும் சொற்களைப் பயன்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் மலேசிய இந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ். மோகன் ஷண்.
அச்சொற்கள் இந்திய சமூகத்தை இழிவுபடுத்தும் சொற்களாகக் கருதப்படுகின்றன என்றவர் சொன்னதாக மக்களோசை நாளிதழ் கூறியது.
“மகாதிர் அச்சொற்களைப் பயன்படுத்தியது மரியாதைக் குறைவான செயல்.
“அச்சொற்களைச் சிறு வயது முதல் பயன்படுத்தி வரூவதாகக் கூறி அதை அவர் நியாயப்படுத்த முயல்வதை ஏற்க முடியாது. இது, இப்படிப்பட்ட தலைவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியர்கள் ‘அடிமைகள்’ என்ற நிலைக்குத் தாழ்த்தப்படுவார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது”, என்று மோகன் ஓர் அறிக்கையில் கூறினார்.
சனிக்கிழமை ஜோகூரில் நிதி திரட்டும் நிகழ்வு ஒன்றில் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்துப் பேசியபோது முன்னாள் பிரதமர் அச்சொற்களைப் பயன்படுத்தியது குறித்து மோகன் கருத்துரைத்தார்.
‘கிலிங்’ என்றால் என்ன பொருள் திருவாளர் மோகன்ஷான்?