மே 9-இல் 14வது பொதுத் தேர்தலுக்காக பள்ளிகள் மூடப்படும்.
சிறப்புக் காரணத்துக்காக அச்சிறப்பு விடுமுறை என்று பராமரிப்பு கல்வி அமைச்சர் மஹாட்சிர் காலிட் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
வாக்களிப்பு நாளன்று பள்ளிகள் வாக்களிப்பு மையங்களாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன.
வார நாளில் தேர்தல் நடத்தப்படுவது 1999க்குப் பிறகு இதுவே முதல்முறையாகும். அதேபோல் , 1959க்குப் பிறகு இப்போதுதான் முதல் முறையாக புதன்கிழமையில் தேர்தல் நடைபெறுகிறது.