மே 9 இல் நடைபெறவிருக்கும் 14 ஆவது பொதுத் தேர்தலில் 2018 ஆண்டில் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டவர்கள் வாக்களிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.
பயன்படுத்தப்படும் வாக்காளர் பட்டியல் 2017 ஆண்டின் நான்காம் பகுதி வரையிலானது (04 2017).
அந்தத் தேர்தல் வாக்களார் பட்டியலில் 14, 940, 624 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் இன்று புத்ரா ஜெயாவில் அறிவித்தது.
இந்த ஆண்டில் வாக்காளர்களாகப் பதிவு செய்தவர்கள் 14 ஆவது பொதுத் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்பதை தேர்தல் ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.
இதற்கான காரணம் 2018 ஆம் ஆண்டின் முதல் கால் பாகத்திற்கான வாக்களர் பட்டியல் இன்னும் அரசு ஏட்டில் (கெஜெட்டில்) பதிவு செய்யப்படவில்லை.
மேலும், வாக்காளர் பட்டியலை பொதுமக்களின் பார்வைக்கு வைத்து ஆட்சேபங்களைப் பெறும் நடைமுறை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அந்தப் பேச்சாளர் கூறினார்.
வேட்பாளர் பட்டியல் விற்பனை ஏப்ரல் 16, 2018 இல் தொடங்கும்.