ஒவ்வொரு கட்சியும் அதன் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் பாஸ் சும்மா இருந்து விடுமா? அதுவும் அதன் தேர்தல் கொள்கையை வெளியிட்டுள்ளது. அதில் பிரிம் தொகை உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.
பராமரிப்புப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 14வது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்றால் பிரிம் தொகையை உயர்த்தி ஆளுக்கு ரிம 2,000 கொடுப்பதாக அறிவித்துள்ள நிலையில் பாஸ் அதற்கும் மேலே கொடுக்க முன்வந்துள்ளது.
பாஸ் உதவித் தலைவர் முகம்மட் அமார் நிக் அப்துல்லா தேர்தலில் பாஸ் வெற்றி பெற்று அவர் பிரதமரானால் இப்போது கொடுக்கப்படும் பிரிம் தொகை ரிம2,500 ஆக உயர்த்தப்படும் என்றார்.
“இன்றிரவு அறிவித்துக் கொள்கிறேன், நாங்கள் வெற்றி பெற்று நான் பிரதமரானால் ரிம2,500 உதவித் தொகை கொடுப்பேன்”, என்றவர் நேற்றிரவு கோத்தா பாருவில் ஒரு நிகழ்வில் கூறினார்.
சும்மா சொல்வதற்கு என்ன தடை?