வாக்களிப்பு நாள் புதன்கிழமையா அல்லது வேறொரு நாளா என்பதை முடிவு செய்யும் உரிமை தேர்தல் ஆணையத்துக்கு உண்டு என்கிறார் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்.
மக்கள் வாக்காளர்கள் என்ற முறையில் தங்கள் பொறுப்பை உணர்ந்திருப்பதும் அவர்கள் வாக்களிப்புப் பகுதிக்கு அப்பால் இருந்தால்கூட அவர்களை வாக்களிக்கும் பகுதிக்குத் திரும்பிச் சென்று வாக்களிக்கச் செயவதும்தான் முக்கியம் என்றாரவர்.
“இசியைக் குறை சொல்லாதீர்கள். இசி வாக்களிப்பை எந்த நாளில் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அது அதன் உரிமை. எந்த நாளாக இருந்தாலும், வெள்ளிக்கிழமையாக இருந்தால்கூட எங்களுக்குப் பிரச்னை இல்லை, வெள்ளிக்கிழமை தொழுகையில் நாள் முழுவதும் ஈடுபடுவதில்லையே”, என்றார்.