14 ஆவது பொதுத் தேர்தல் வாக்களிப்பு நாளான மே 9 (புதன்கிழமை) தேசியப் பொது விடுமுறை நாளாக பிரதமர் அலுவலகம் அறிவித்தது.
வேலை நாளான மே 9 வாக்களிப்பு நாளாக அறிவிக்கப்பட்டதற்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் இந்த அறிவிப்பைச் செய்துள்ளது.
தேர்தல் ஆணையம் மே 9 ஐ 14 ஆவது பொதுத் தேர்தல் வாக்களிப்பு நாளாக அறிவித்திருந்ததைத் தொடர்ந்து அரசாங்கம் அந்நாளை நாடு முழுமைக்குமான கூடுதல் பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
இது வாக்காளர்கள் என்ற முறையில் மலேசியர்கள் தங்களுடைய கடமைகளை ஆற்றுவதற்கு அனுமதிப்பதாகும் என்று பிரதமர் அலுவலகம் அதன் அறிக்கையில் கூறுகிறது.
தேர்தல் பயம் வந்து விட்டால் அரசியல் தலைவர்கள் அந்தர் பல்டி அடிப்பார்கள்.