பினாங்கு அம்னோ தலைமைத்துவத்தில் பிரச்னை என்ற வதந்திகளை அக்கட்சி தலைவர் ஒருவர் மறுத்துள்ளார்.
பினாங்கு அம்னோ தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்ததை அடுத்து இந்த வதந்திகள் உலவத் தொடங்கின.
“பினாங்கு அம்னோவில் நெருக்கடி என்று நினைப்பது தவறு. அதில் நெருக்கடி எதுவும் இல்லை”, என மாநிலத் தொடர்புக்குழுத் துணைத் தலைவர் ரிஸால் மரைக்கான் ஓர் அறிக்கையில் கூறினார்.
ஜிஇ14-இல் புதுமுகங்களுக்கு இடமளித்திருப்பது சைனலின் “பெருந்தன்மையை”க் காண்பிக்கிறது என்றாரவர்.
“பினாங்கு பிஎன் தேர்தல் இயந்திரத்துக்கு இன்னமும் சைனல்தான் தலைவர் என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்”, என்றும் ரிஸால் கூறினார்.