உங்கள் கருத்து: வெற்றிபெற முடியாத இடத்துக்கு மைபிபியும் மஇகாவும் போட்டி

‘மைபிபி  பிஎன்னில்  இருப்பதா,  இல்லையா  என்பதை  நஜிப்பைச்  சந்தித்த  பின்னர்  முடிவு   செய்யும்’

கெட்டிக்கார  வாக்காளர்:   மைபிபி   தலைவர்   எம். கேவியெஸ்ஸுக்கு  இந்நேரம்   புரிந்திருக்குமே.  மஇகா  உள்ளவரை     மைபிபிக்கு   பிஎன்னில்  எந்தச்   சலுகையும்  கிடைக்கப்போவதில்லை  என்று.

கேமரன்  மலையில்  சுயேச்சையாக   போட்டியிடும்   எண்ணம்  எதுவும்   இருந்தால்,  வேண்டாம்  என்பதே  என்  ஆலோசனை,    வைப்புத்தொகையாவது    மிச்சப்படும்.

வீண்பேச்சு: பிஎன்னிலிருந்து  மைபிபி  விலகுவதா?  அப்படி   எதுவும்  நடக்காது. அவர்கள்  என்னதான்  கத்திக்  கூப்பாடு   போட்டாலும்   கேமரன்  மலை  மஇகாவுக்குத்தான்.

பெயரிலி  2447431479879374:  கேவியெஸ்     சரியான  கோமாளி.  ஹரப்பான்  அவரை  அணுகியதாம்.  உண்மையாக?  எதற்கய்யா?

நம்பிக்கை123: ஹரப்பான்  அவரை   அணுகியதாக  கேவியெஸ்   கூறிக்கொள்கிறார்.   அப்படியா?

பெயரிலி_b3cdcd05:   எதிரணியில் ,  தொகுதி  மக்கள்   இந்த   வேட்பாளர்தான்  வேண்டும்   என்றோ    வேட்பாளர்   இந்தத்  தொகுதிதான்   வேண்டும்  என்றோ  கேட்பதில்லை.

அவர்கள்  ஒரே  இடத்தில்  போட்டியிடுவதில்லை,  சுற்றிச்  சுற்றி  வருகிறார்கள். எந்த  இடம்  கொடுக்கப்படுகிறதோ  அங்கு   நிற்கிறார்கள்.  சட்டமன்ற  உறுப்பினர்களாக   எம்பிகளாக   தங்கள்  கடமையைச்  சரியாகச்  செய்கிறார்கள்.

மிரட்டுவது  கோரிக்கை  விடுப்பது    எல்லாம்   பிஎன்னில்தான். அவர்கள்   சேவை    செய்வது   மக்களுக்கு   அல்ல,  ஊழல்  தலைவர்களுக்கு.

அதனால்தான்  தேர்தல்  வந்ததும்   தலைவர்களிடம்  கோரிக்கைகளை  வைக்கிறார்கள்.

நியாயவான்: ஏன்  இந்த    ‘நாடகம்’.  மைபிபி  பிஎன்னிலிருந்து  விலகுவதற்குத்   தலைவர்   நஜிப்   அப்துல்  ரசாக்கைச்   சந்தித்து   ஆலோசனை  பெற   வேண்டுமா,  என்ன?  உடனே  விலக   வேண்டியதுதானே.

ஆனால்,  கேவியெஸ்  விலக  மாட்டார்.  அவர்  செய்வது  எல்லாமே   அவரது    நன்மைக்காகத்தான்.  கட்சிக்காகக்கூட  இல்லை.

ஸ்ரீநிவாசகம்    சகோதரர்கள்   உருவாக்கிய   கட்சியை   இப்படி  ஒரு   கேவலமான  நிலைக்குக்   கொண்டு  வந்து  விட்டாரே .

பெர்ன்ஸ்:  மைபிபிபி   அல்லது   பிபிபி  பிஎன்னிலிருந்து  வெளியேறி   முன்பு  பேராக்கில்   பலம்வாய்ந்த   கட்சியாக   இருந்ததே   அந்த  நிலைக்குத்   திரும்பிச்   செல்வதுதான்   நல்லது  என்று   நினைக்கிறேன்.  ஆனால்,  கேவியெஸ்  இருக்கக்கூடாது.

மாறுவீர்:  மைபிபி  கலைக்கப்பட்டு    அதன்  கணக்கில்   உள்ள   பணம்   உறுப்பினர்களுக்குப்  பகிர்ந்தளிக்கப்பட   வேண்டும்.  அதுதான்  அக்கட்சி   சம்பந்தப்பட்ட    அனைவருக்கும்   நல்லது.

பலருக்குத்    தெரியும்-  எதிர்காலத்தில்   ஏதாவது  பதவி  கிடைக்கலாம்    என்ற   நப்பாசையில்தான்    கேவியெஸ்   ஒரு  மகத்தான  கட்சியின்  சவத்தைத்தான்  பிடித்துத்  தொங்கிக்கொண்டிருக்கிறார்  என்பது  . ஆனால்,  அது  நடக்காது   என்பது     மேலும்  பலருக்குத்   தெரியும்.

விக்டர்:    கேமரன்   மலையோ   அல்லது   வேறு   எந்த    நாடாளுமன்றத்  தொகுதியோ      கிடைக்காது   என்பது   கேவியெஸுக்கு  நல்லாவே    தெரியும்.
அதனால்தான்  வெளியேறப்  போவதாக  ஒரு  ‘மிரட்டல்  நாடகத்தை’  அரங்கேற்றுகிறார். இடம்  கொடுக்கப்படவில்லை   அதனால்  தேர்தல்   வேலைகளைச்   செய்யவில்லை   என்று  காரணம்  கூறலாம்   அல்லவா.

மாக்கியவல்லி: கேவியெஸ்- ஸுக்கு  ‘அங்கல்  போண்ட்’  என்று  ஒரு   செல்லப்பெயரும்.  அது  என்ன,  அம்னோவுக்கு  அவர்  bonded ஆ( அடிமைப் பட்டிருக்கிறாரா)?

ஜெரார்ட் லூர்துசாமி:  கேவியெஸ்ஸும்  சிவராஜாவும்  மல்லுக்கட்டுக்கிறார்கள்.  ஆனால்,  அங்கு  வெல்லப்போவது   ஹரப்பான்.  பாஸ்  மலாய்க்காரர்  வாக்குகளை  உடைக்கும்,  பிஎஸ்எம்   இந்தியர்   மற்றும்   ஓராங்   அஸ்லி  வாக்குகளைச்  சிதறடிக்கும். சீனர்கள்   டிஏபி  பக்கம்தான்   நிற்பார்கள்.

விஜிவி:  உண்மைதான்.  இருவருமே  வெற்றிபெறப்  போவதில்லை,  பிறகு   ஏன் அடித்துக்கொள்கிறார்கள்?

ரெட்  ஹீரோ:  கேவியெஸுக்கு  இடம்   தேவை  இல்லை.  இது  தெள்ளத்  தெளிவான  விசயம்தானே.  தன்னை  பிஎன்   களமிறக்கினால்   பயங்கரத்   தோல்வி  நிச்சயம்   என்பது   அவருக்கே   தெரியும்.   அவர்  அடிபோடுவது    எதற்கு   என்பதும்   நமக்குத்   தெரியும்.

போலி வீரன்:  ஒரு  செனட்டர்  ஆக்கப்பட்டு   துணை  அமைச்சர்    பதவியில்   அமர    வேண்டும்.  அதற்குத்தான்   கேவியெஸ்  அடிபோடுகிறார்.