14 ஆவது பொதுத் தேர்தலில் பிகேஆர் சின்னத்தின் கீழ் ஹரப்பான் போட்டியிடுவதில் தேர்தல் ஆணையத்திற்கு ஆட்சேபம் இல்லை.
பிகேஆர் சின்னத்தின் கீழ் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பிகேஆரின் அனுமதியைப் பெற வேண்டும், தேர்தல் ஆணையத்தின் அனுமதியை அல்ல என்பதை தாம் திட்டவட்டமாகக் கூறியிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லா தெரிவித்ததாக பெர்னாமா செய்தி கூறுகிறது.
மன்றங்கள் பதிவாளர் ஹரப்பான் கூட்டணியைப் பதிவு செய்யாததால், ஹரப்பான் பிகேஆரின் “கண்” சின்னத்தை அதன் வேட்பாளர்களுக்கான பொதுச் சின்னமாகப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இருப்பினும், தேர்தலில் போட்டியிட விரும்பும் எந்த ஓர் அரசியல் கட்சியும் அதன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மன்றங்கள் சட்டம் 1966 இன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஹசிம் சுட்டிக் காட்டினார்.