பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இஸ்லாமிய அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார் என்பதால் அவரது கட்சி அவருக்கு கட்சித் தலைவர் பதவி மற்றும் திராங்கானு மந்திரி பெசார் பதவி ஆகியவற்றுக்கான பொறுப்பை அவரிடம் ஒப்படைத்ததாக ஹாடி கூறிக்கொண்டார்.
எந்த ஒரு அரசாங்கத்தையும் வழிநடத்தும் அரசியல் அறிவு பாஸ் தலைவர் ஹாடிக்கு கிடையாது என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் கூறியிருந்தது பற்றி ஹாடி இவ்வாறு கூறினார்.
ஹாடி அவரது இஸ்லாமிய அரசியல் அறிவியல் முதுகலைப் பட்டத்தை எகிப்தின் அல்-அஸ்ஹார் பல்கலைக் கழகத்தில் 1976 ஆம் ஆண்டில் பெற்றதாக கூறினார்.
திராங்கானு மாநில அரசை நிர்வாகிப்பதிலும் தோல்வியுற்றார் என்று மகாதிர் கூறியிருந்ததற்கும் ஹாடி அவரைச் சாடினார்.
பாஸ் திரங்கானு மாநிலத்தை ஆட்சி செய்த போது மகாதிரின் தலைமையிருந்த மத்திய அரசின் பல பொருளாதார மற்றும் நிருவாக கெடுபிடிக்கு உட்படுத்தப்பட்டது. கிளந்தான் மக்களின் உரிமைகளும் பெடரல் அரசின் தலையீட்டால் மறுக்கப்பட்டன என்று கோலதிரங்கானு பாஸ் தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.