முன்னாள் அனைத்துலக வாணிகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் ரபிடா அசிஸ் அரசாங்கத்தைக் குறைகூறிய அம்னோ மூத்த தலைவர்களைச் சாடிய அம்னோ வனிதா தலைவர் ஷாரிஸாட்டை கடுமையாகத் தாக்கினார்.
“ரொம்ப பேச வேண்டாம், மக்களின் ஒவ்வொரு சென்னையும் திருப்பிக் கொடு”, என்று ரபிடா மலேசியாகினியிடம் கூறினார்.
தேசிய தீவன கோர்ப்ரேசன் அரசாங்கத்திடமிருந்து பெற்ற ரிம250 கடனில் இன்னும் ரிம248 மில்லியனை அரசாங்கத்திற்கு கட்ட வேண்டி இருப்பதாக கூறும் செய்தியை ரபிடா சுட்டிக் காட்டினார்.
ஷாரிஸாட்டின் கணவர் முகமட் சாலே இஸ்மாயில் அந்நிறுவனத்தின் தலைவர், அவரின் பிள்ளைகள் இயக்குனர்களாக இருக்கிறார்கள்.
முன்னதாக இன்று, லெம்பா பந்தாயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அரசாங்கத்தைக் குறைகூறியதற்காக அம்னோ மூத்த தலைவர்களை ஷாரிஸாட் சாடியிருந்தார்.
பேசுவதும் உண்மையக் கூறுவதும் எனது ஜனநாயக உரிமை என்று ரபிடா மேலும் கூறினார்.
சமீப காலத்தில், ரபிடா பகிரங்கமாக பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப்பை குறைகூறி வருவதுடன், அவர் மகாதிருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.