நேற்று அம்னோவை கலைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த 16 அம்னோ கிளை உறுப்பினர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் இன்று அறிவித்தார்.
அம்னோவை வீழ்த்துவதற்கான எதிரணியின் விளயட்டில் இந்த 16 பேரும் ஒரு பாகமாக இருக்கின்றனர் என்று அட்னான் கூறியதாக நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் செய்தி கூறுகிறது.
அம்னோ வழக்குரைஞர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அவர்களை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாரவர்.
ஆறு மாநிலத்தைச் சேர்ந்த 11 அம்னோ கிளைகளின் உறுப்பினர்களான அந்த 16 பேரும் கட்சியின் தேர்தலைத் தள்ளிப்போட அனுமதி வழங்கிய மன்றங்கள் பதிவாளர் (ரோஸ்) மற்றும் அம்னோவுக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கட்சி சனநாயகத்தைக் கொலை செய்தார் மகாதீர். அதன் பயனை இன்று அக்கட்சி உறுப்பினர் அனுபவிக்கின்றனர். இதுதான் சர்வாதிகாரி ஆட்சிக்கு வித்திட்டதின் காரணமாகும்.