கூட்டரசுப் பிரதேச பிஎன் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது; மசீசவுக்கு பண்டார் துன் ரசாக் தொகுதி இல்லை

14 ஆவது பொதுத் தேர்தலுக்கான பிஎன் கூட்டரசு பிரதேச வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். அம்னோ தொடர்ந்து 6 இருக்கைகளுக்கும் மசீச 4 இருக்கைகளுக்கும் போட்டியிடும்.

பண்டார் துன் ரசாக் இருக்கையை அம்னோ எடுத்துக் கொண்டதை மசீச உறுதிப்படுத்தியது.

பண்டார் துன் ரசாக்கில் பெர்சியாரான் கிலாங் அம்னோ இளைஞர் தலைவர் அட்னான் அபு செமான் போட்டியிடுவார்.

இரு அமைச்சர்கள், ஜொஹாரி அப்துல் கனி மற்ரும் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் முறையே தித்திவங்சா மற்றும் புத்ராஜெயாவில் போட்டியிடுவர்.

இதர அம்னோ வேட்பாளர்கள்: ராஜா நோங் சிக் ராஜா ஸைனால் அபிடின் (லெம்பா பந்தாய்), ஸுல்ஹஸ்னான் ராபிக் (செத்திவங்சா), லாபுவான் எம்பி ரோஸ்மான் இஸ்லி.

கூட்டரசுப் பிரதேச மசீச தலைவ இயு தியோங் லுக் வங்சா மாஜுவில் மூன்றாம் தடவையாக போட்டியிடுகிறார்.

மூன்று புதிய மசீசவினர் – செராஸ் வனிதா மசீச தலைவர் ஹெங் சின் யீ (செராஸ்), புக்கிட் பிந்தாங் வனிதா மசீச தலைவர் ஆன் இயன் இயன் ( புக்கிட் பிந்தாங்) மற்றும் செபுத்தே மசீச உதவிச் செயலாளர் சான் குயின் எர் (செபுத்தே) ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

கெராக்கான் வேட்பாளர்கள் – ஓங் சியாங் லியாங் (கெப்போங்) டோமினிக் லாவ் (பத்து) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மைபிபிபி உதவித் தலைவர் லோகா பால மோகன் செகாம்புட் தொகுதியில் போட்டியிடுகிறார்.

வேட்பாளர்கள் அவர்களின் நியமனக் கடிதங்களை இன்று கூட்டரசுப் பிரதேச பிஎன் தலைவர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.