பிஎன் வேட்பாளராக லோக பாலன் மோகன் எடுத்துள்ள முடிவிற்கு மைபிபிபி ஒப்புதல் அளிக்கவில்லை கட்சித் தலைவர் எம். கேவியஸ் கூறுகிறார்.
கேவியஸ் கேமரன் மலையில் போட்டியிடுவதற்கு முயன்றார். ஆனால் அத்தொகுதி மஇகாவுக்கு என்று உறுத்திப்படுத்தப்பட்டு விட்டது.
மாறாக, கேவியஸுக்கு செகம்புட் தொகுதி கொடுக்கப்பட்டது. அதை அவர் நிராகரித்து விட்டதுடன் மைபிபிபியை பாரிசானிலிருந்து வெளியேற்றப் போவதாகவு கூறினார்.
மைபிபிபியிலிருந்து யாரும் செகாம்புட் தொகுதியில் போட்டியிடுவதை தாம் நிறுத்தவோ தடுக்கவோ போவதில்லை என்று கூறிய கேவியஸ், அதில் லோகாவுக்கு விருப்பம் இருக்கிறது. ஆகவே நான் ஒன்றும் சொல்லமாட்டேன். அது அவரைப் பொறுத்தது என்றாரவர்.
செகாம்புட் தொகுதியை மைபிபிபி வெல்ல முடியும் என்பதில் கேவியஸுக்கு நம்பிக்கை இல்லை.
லோகா செகாம்புட் தொகுதியில் நிறுத்தப்படுவார் என்பதை கூட்டரசுப் பிரதேச பிஎன் இன்று உறுதிப்படுத்தியது.