பினாங்கில் மகாதிருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

 

பிகேஆர் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்ட சுமர் 50 பேர் கொண்ட கூட்டத்தினர் செபராங் ஜெயாவில் இன்று மதியம் பிகேஆர் அலுவலத்தின் முன்கூடி பெர்சத்துவின் தலைவர் மகாதிர் முகமட் பிகேஆரின் சின்னத்தை பயன்படுத்த்வதற்கு எதிராக அவர்களின் அதிருப்தியை வெளியிட்டனர்.

பிகேஆரின் சின்னத்தை மகாதிர் பயன்படுத்த ஒரு சந்தர்ப்பம் அளித்ததற்காக தாங்கள் கட்சியின் தலைமைத்துவம் மீது வெட்கப்படுவதாக அந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தலைமை ஏற்றிருந்த எ. லோகநாதன் என்பவர் கூறினார்.

“பிகேஆர் தோற்றுவிக்கப்பட்டதற்கு மகாதிர்தான் காரணம். பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வாருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட ஓரினப்புணர்ச்சி குற்றச்சாட்டு மிகக் கடுமையானது. ஆனாலும் அவர் நமது சின்னத்தைப் பயன்படுத்த அனுமதிதோம்.

“நாங்கள் பிகேஆரை ஆதரிக்க மாட்டோம்; நாங்கள் பிகேஆருக்கு வாக்களிக்க மாட்டோம்”, என்று 2008 ஆம் ஆண்டில் பிகேஆர் பத்து கவான் உதவித் தலைவாராக இருந்ததாக கூறிக்கொண்ட லோகநாதன், கட்சியிலுள்ள 11,500 இந்திய உறுப்பினர்களைப் பிரநிதிப்பதாகவும் கூறிகொண்டார்.

நேற்று, இதே போன்ற 120,000 “மனக்குறையுடைய” உறுப்பினர்களைப் பிரதிநிதிப்பாக கூறிக்கொண்ட ஒரு கூட்டத்தினர் பெட்டாலிங் ஜெயா பிகேஆர் தலைமையத்தின்முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பிகேஆர் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலி இந்த ஆர்ப்பாட்டங்களைப் “பொறுப்பற்றது, சம்பந்தமில்லாதது மற்றும் அவமதிப்புச் செய்வது” என்று கூறினார்.

பிகேஆரின் தேசிய இளைஞர் துணைத் தலைவர் டாக்டர் அபிப் பஹார்டின் இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை “அம்னோவின் ஏஜென்டுகள்” என்று கூறினார்.