கெடா பிஎன், லங்காவியின் இப்போதைய எம்பி நவாவி அஹமட்டே அந்த இடத்தில் மீண்டும் களமிறக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
57வயது பொறியாளரான நவாவிக்கு எதிராக தேர்தல் களத்தில் நிற்கப்போகிறவர் டாக்டர் மகாதிர் முகம்மட். இப்படி ஒரு நிலை வரும் என்பதை நவாவி கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
ஜூலை மாதம் வந்தால் 93 வயதாகும் மகாதிர் பக்கத்தான் ஹரப்பானின் பிரதமர் வேட்பாளருமுவார்.
2013 பொதுத் தேர்தலில் நவாவி 11, 861 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கெடா வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கெடா பராமரிப்பு மந்திரி புசார் அஹ்மட் பாஷா, தாம் சுகா மெனாந்தி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப்போவதாக தெரிவித்தார். முன்பு பக்கார் பாத்தா என்ற பெயரில் விளங்கிய அத்தொகுதியில் அவர் ஆறாவது தடவையாக போட்டியிடுகிறார்.
பராமரிப்புப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசியல் செயலாளர் கஜாலி இப்ராகிம், அவரின் சகோதரி காமா நோரியா இப்ராகிமுக்குப் பதிலாக பெடு சட்டமன்றத் தொகுதியில் களமிறக்கப்படுகிறார்.
பிஎன் மாநிலத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் பட்சத்தில் கஜாலியே கெடாவின் அடுத்த மந்திரி புசார் என்று கூறப்படுகிறது.
2013 பொதுத் தேர்தலில் பிஎன் போட்டியிட்ட 15 நாடாளுமன்ற இடங்களில் பத்திலும் 36 சட்டமன்ற இடங்களில் 21-லும் வென்றது.
கோயிந்தா! கோயிந்தா!