பராமரிப்பு அரசின் பிரதமரான நஜிப் ரசாக்கை எதிர்த்து அவரது பெக்கான் நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் துணைப் பிரதமர் காலஞ்சென்ற கபார் பாவின் பேரன் ஸாகிட் மாட் அரிப் போட்டியிடுகிறார்.
பெர்சத்து உச்சமன்ற உறுப்பினரான ஸாகிட் பெல்டாவின் முன்னாள் தலைவர் முகமட் இசாவின் முன்னாள் சிறப்பு அதிகாரியுமாக இருந்தவர்.
ஸாகிட்டின் நியமனத்தை மகாதிர் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 15 இல், பெர்சத்துவின் பெக்கான் வேட்பாளராக முன்மொழியப்பட்டிருந்த கமருல் அரிப்பின் முகமட் ஷஹார் அத்தொகுதியை ஸாகிட்டுக்கு விட்டுக் கொடுக்கப் போவதாக இன்று வெளியிடுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றம் வேண்டும் என்று மகாதிர் கோட்டுக் கொண்டதாகவும் அதற்கு தாம் ஒப்புக்கொண்டதாகவும் கமருல் மேலும் கூறினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில், மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) கூச்சிங்கில் பெல்டா முதலீட்டு நிறுவனம் வாங்கிய ஒரு ஹோட்டல் சம்பந்தமான விசாரணைக்காக ஸாகிட்டை கைது செய்தது.
தவறு செய்துள்ளதாக கூறப்படுவதை ஸாகிட் மறுத்தார்.
பெல்டாவில் நடக்கும் ஊழல்கள் பற்றி நிறையப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.