பராமரிப்பு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எதிர்வரும் பொதுத் தேர்தலில் “சிறப்பான முடிவுகளுடன்” பிஎன் வெற்றிபெறும் வாய்ப்பு இருப்பதாக நம்புகிறார்.
புளும்பெர்க் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் அரசாங்கம் மாறுவதற்கான சாத்தியமில்லை என்றாரவர். அதேவேளையில் பிஎன் மிகப் பெரிய வெற்றிபெறும் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை.
“ஓரளவு நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. அரசாங்கம் மாறும் என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை.
“அதற்காக நாங்கள் மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றி பெறுவோம் என்று கூற வரவில்லை. ஆனால், முடிவு நல்லவிதமாக இருக்கும் என்றே நம்புகிறோம்”, என்றார்.
மூன்றாண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேர்காணல் வழங்கிய நஜிப், முக்கிய எதிரணியான பக்கத்தான் ஹரப்பான், 2013இல் இருந்ததுபோல் பாஸின் துணை இப்போது இல்லை என்பதால், தட்டுத் தடுமாறும் என்றார்.
சீன வாக்காளர்களிடம் எதிரணியை ஆதரிக்கும் ஆர்வம் முன்பிருந்ததைப் போல் இப்போது இல்லை.
“இன்று (அரசாங்கம் மாறும்) சாத்தியமில்லை என்பதை அவர்கள் அறிந்துள்ளனர்”, என்றார் நஜிப்.
நம்பிக்கை அவநம்பிக்கையாகும் காலம் கனிந்து வருகின்றது தலைவரே!