அம்னோமீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தாலும் பிஎன் வேட்பாளர்கள் வரும் சனிக்கிழமை 14வது பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தடையின்றித் தாக்கல் செய்யலாம் என்கிறார் அம்னோ சட்ட ஆலோசகர் முகம்மட் ஹவாரிஸாம் ஹருன்.
வேட்பாளர்களின் நியமனக் கடிதத்தில் பராமரிப்புப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பிஎன் தலைவர் என்ற முறையில்தான் கையெழுத்திட்டுள்ளார், அம்னோ தலைவராக அல்ல.
“மே 9 பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 13 கட்சிகளின் கூட்டணியான பிஎன் சார்பில்தான் போட்டியிடுகிறார்கள். அவரவர் கட்சியின் சார்பில் அல்ல.
“எனவே எதிரணி உள்பட சில தரப்புகள் பிஎன் ஜிஇ14-இல் போட்டியிட முடியாது என்று கூறுவது சரியல்ல”. என்றாரவர்.
எது எப்படியாயினும் வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களின் தகுதி குறித்து இறுதி முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம்தான் உள்ளது என்றும் அவர் சொன்னார்.
ஆட்சி எங்க கையில். நாங்க சொன்னா சட்டம். பகாத்தான் சொன்னா மட்டம்!