பொய்ச் செய்தி எதிர்ப்புச் சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது, மலேசியாகினி நீதிமன்றத்தில் சவால்

 

சமீபத்தில் இயற்றப்பட்ட பொய்ச் செய்தி எதிர்ப்புச் சட்டம் 2018 அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும் அச்சட்டத்தை நீக்கக் கோரும் ஒரு நீதிபரிபாலன மறுஆய்வுக்கு அனுமதி கோரும் மனுவை இன்று மலேசியாகினி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இச்சட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இதர அரசு சார்பற்ற அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதாகும். இந்தச் சர்ச்சைக்குரிய சட்டத்திற்கு சவால் விடும் முதல் செய்தித்தளம் மலேசியாகினி.

மலேசியாகினி அதன் நிறுவனம் எம்கினி டோட்கோம் செண்ட். பெர்ஹாட் (MKINI Dotcom Sdn Bhd) மூலம் உள்துறை அம்மைச்சு மற்றும் மலேசிய அரசாங்கம் ஆகியவற்றை பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிட்டு கோலாலம்பூர் உயர்நிதீமன்றத்தில் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளது.

இந்த மனுவை டைம் மற்று காமினி என்ற வழக்குரைஞர் நிறுவனம் தாக்கல் செய்தது.