14 ஆவது பொதுத் தேர்தலைக் கண்காணிக்க மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அனுமதிப்பது தவறு என்பதோடு அது தேவையற்றது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.
பொதுத் தேர்தலைக் கண்காணிக்க சுஹாகாமை அனுமதிக்க மறுத்து விட்டதால் தேர்தல் ஆணையம் கடும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டது. அவற்றுக்கு பதில் அளித்த ஆணையத்தின் தலைவர் முகமட் ஹாசிம் அப்துல்லா, தேர்தலை நடத்தும் பொறுப்பை அரசமைப்புச் சட்டம் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள வேளையில், சுஹாகாமிற்கு அதன் குறியிலக்கு, அடிப்படை உரிமைகள் போன்றவற்றை பெடரல் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது என்பதை அவர் அனைவருக்கும் நினைவூட்டினார்.
அரசமைப்புச் சட்டப்படி பேரரசரால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையம் அதன் அதிகார எல்லைக்குள் தேர்தல் சட்டப்படி தேர்தலை நடத்தும் பொறுப்பைக் கொண்டிருக்கிறது என்று கூறிய முகமட் ஹசிம், தேர்தல் ஆணையம் பல வெளிநாடுகளையும் சில சுயேட்சையான மற்றும் கட்சி சார்பற்ற அமைப்புகளையும் தேர்தல் கண்காணிப்பாளர்களாக அழைத்துள்ளதையும் குறிப்பிட்ட அவர், சுஹாகாமின் ஈடுபாடு ‘தேவையற்றது” என்று கூறினார்.
இத்தேர்தலில் பங்கேற்கும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் ஏஜெண்டுகள் ஆகியோரின் எண்ணிக்கை 250,000 வரையில் இருக்கலாம் என்று மதிப்பிட்டார்.
“வெளியார் தலையீடு எதுவும் இன்றி தேர்தல் சுமுகமாக நடப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும் என்று அவர் மேலும் கூறினார்.
ஹா ஹா! என்ன ஓர் அருமையான விளக்கம் தலைவரே!. நீங்களா சனநாயகத்தின் தலைவன்?