நஜிப் : புதிய அரசாங்கத்தில் சீனப் பிரதிநிதித்துவம் இல்லை என்றால், அது சோகமான நாள்

“அமைச்சரவை அல்லது அரசாங்கத்தில், சீனர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனால் அல்லது மிகச் சிறிய அளவில் இருந்தால், அது ஒரு சோக நாளாக அமையும்”.

14-வது பொதுத் தேர்தலில், பாரிசான் நேஷனலின் பிரதிநிதிகளான சீன வேட்பாளர்களைப் புறக்கணிக்கும் சீன வாக்காளர்களுக்கு நஜிப் ரசாக்கின் செய்தி இதுவாகும்.

சீன வேட்பாளர்களைப் புறக்கணித்து, மற்றவர்களுக்கு வாக்களித்தால், பிறகு சீன பிரதிநிதிகளை அமைச்சரவையில் நியமிக்க முடியாது.

“அரசாங்கத்தில் பலமான சீனப் பிரதிநிதித்துவம் வேண்டும், நாங்கள் சீன தலைவர்களை அகற்றினால், அது அரசாங்கத்தில் சீனர்களின் பிரதிநிதித்துவத்தைப் பலவீனப்படுத்திவிடும்,” என்று பிஎன் தலைவருமான அவர் ஒரு சிறப்பு பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில், செய்த தவற்றை மீண்டும் செய்யக்கூடாது என சீன வாக்காளர்களுக்கு அவர் அறிவுரை கூறினார்.

“இம்முறை பி.என்.-ஓடு இணைந்து வாருங்கள். பிஎன் அரசாங்கத்தின் வளர்ந்து வரும் பொருளாதாரம், வர்த்தக வாய்ப்புகள், நிதி உதவிகள் மற்றும் மைக்ரோ கடனுதவிகள் போன்றவற்றைப் பாருங்கள்.