என்எப்சி: தொடக்கநிலை விசாரணையிலேயே “எரிச்சல்” அடைந்தது பிஏசி

பொதுப்பணம் தவறாகக் கையாளப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதைக் கண்டு நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு(பிஏசி) “எரிச்சல்” அடைந்திருப்பதாக அக்குழுத் தலைவர் அஸ்மி காலிட் கூறினார்.

இன்று, நேசனல் ஃபீட்லோட் செண்டர்(என்பிசி) தொடர்பில் விவசாய, விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்த பின்னர் அஸ்மி இவ்வாறு கூறினார்.

“நிர்வாக முறைகளைத் திருத்தி அமைக்க வேண்டும். அமைச்சு சொல்வது உண்மையாக இருந்தால்கூட, மக்களும் வெறுப்படைந்து போயுள்ளனர். அதனால் என்னதான் விளக்கம் கொடுத்தாலும் கேட்க அவர்கள் தயாராக இல்லை”, என்றாரவர்.

இப்படிப்பட்ட சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது பிஎன் ஆட்சிக்கே கெட்ட பெயரைக் கொடுத்து விடுகிறது என்று சலிப்புடன் குறிப்பிட்டார் அஸ்மி.

பொதுப்பணம் சரியாக செலவிடப்படுவதை உறுதிசெய்யும் வழிவகை காணப்பட வேண்டும் என்பதால் அதற்காக பிஏசி நிதி அமைச்சையும் அரசாங்கத் தலைமைச் செயலாளரையும்  அழைத்துப் பேசவிருப்பதாக அஸ்மி தெரிவித்தார்.

TAGS: