தேர்தலோ தேர்தல், இறுதிச் சுற்று:  தியன் சுவா, நம்பிக்கை இழக்காதீர்

 

பத்து நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தகுயற்றவராக அறிவிக்கப்பட்ட பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா ஏமாற்றமடைந்திருக்கும் தமது ஆதரவாளர்களை நம்பிக்கை இழந்துவிட வேண்டாம் என்று டிவிட்டர் வழியாகக் கேட்டுக் கொண்டார்.

நமது தேர்தலைத் திருடுவதற்கு பிஎன் கொள்ளைக்காரவாதிகளை நாம் அனுமதிக்கக்கூடாது. பிஎன்-னுக்கு எதிரான நமது எழுச்சிமிக்க போராட்டத்தைத் தொடர்வோம் என்றும் அவர் டிவிட் செய்துள்ளார்.

போலீஸ் புகார், நேரத்தை வீணாக்குவதாகும், மகாதிர்

கெடா. லங்காவி தொகுதி பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் மகாதிர், நெகிரி செம்பிலானில் பராமரிப்பு மந்திரி பெசார் முகமட் ஹசான் போட்டியில்லாமல் வெற்றி பெற்றதற்கு காரணம் பிகேஆர் வேட்பாளர் ஶ்ரீராம் இழைத்த தவறு என்று கூறினார்.

எல்லாம் நல்லதாகவே இருந்தது, தியன் சுவா நிராகரிக்கப்பட்டது மற்றும் நெகிரி மந்திரி பெசார் முகமட் ஹசான் போட்டியின்றி வெற்றி பெற்றது தவிர என்று மகாதிர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

தமது தனிப்பட்ட ஜெட் விமானத்தில் காணப்பட்ட பிரச்சனை பற்றி தாம் போலீஸ் புகார் செய்யப் போவதில்லை, ஏனென்றால் அது நேரத்தை வீணாக்குவதாகும். அதில் பிரச்சனை ஏதும் இல்லை என்று கூறுவார்கள் என்று மகாதிர் மேலும் கூறினார்.

தேர்தல் பரப்புரை அதிகாரப்பூர்வமாக தொடங்கிற்று

வேட்பாளர் நியமன நடவடிக்கைகள் அனைத்தும் முற்றுப்பெற்றவிட்டன. ஆகவே, அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களும் அவர்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை முழுமையாகத் தொடங்கலாம்.

தேர்தல் பிரச்சாரம் 11 நாள்களுக்கு மே 8 நள்ளிரவரையில் தொடரலாம். மே 9, காலையிலிருந்து வாக்காளர் வாக்களிக்கச் செல்லலாம்.