தேர்தல் ஆணையம்: வேட்பாளர் நியமனம் பற்றிய முடிவுகள் மீது அதிருப்தி கொண்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம்

 

நியமனத் தினத்தன்று எடுக்கப்பட்ட முடிவுகள் மீது அதிருப்தி அடைந்தவர்கள் அந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வரவற்கப்படுகிறார்கள் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லா கூறினார்.

பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவாவின் நியமனப் பத்திரங்கள் இன்று நியமன மையத்தில் நிராகரிக்கப்பட்டது பற்றி கேட்ட போது முகமட் ஹசிம் இவ்வாறு கூறினார்.

நியமன நேரத்தில் செய்யப்படும் முடிவுகள் தேர்தல் அதிகாரியால் (ஆர்ஒ) எடுக்கப்படுகிறது. ஆட்சேபம் தெரிவிக்க விரும்பும் ஒரு வேட்பாளர் அதை ஒரு மனுவின் வழி செய்து, அதன் பின்னர் அதை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லலாம் என்று கூறிய ஹசிம், அது குறித்து இங்கு கேள்வி எழுப்புவதில் பயனில்லை. அது அங்கு அவர்கள் இருந்த இடத்தில் நடந்தது. ஆகையால், அவர்கள் நீதிமன்றத்திற்குச் சென்றால், நீதிமன்றம் ஒரு முடிவு எடுக்கும் என்று புத்ரா ஜெயாவில் தேர்தலை ஆணையத்தின் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறினார்.