கிளேருக்கு எதிரான ஹாடியின் வழக்கு திங்கள்கிழமை தொடங்குகிறது

 

சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸலுக்கு எதிராக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் லண்டனில் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு லண்டனில் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

வழக்கில் வெற்றி பெரும் என்பதில் பாஸுக்கு 80 விழுக்காடு நம்பிக்கை இருக்கிறது என்று ஹாடி கூறுகிறார்.

வழக்கு திங்கள்கிழமை தொடங்குகிறது. முடிவு சில தினங்களுக்குப் பின்னர் எடுக்கப்படும்.

நாம் வெற்றி பெருவோம் என்பதில் நமது லண்டன் வழக்குரைஞர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். பாஸ் வெற்றி பெற்றால் கிளேர் ஒரு பெரும் செலவுத் தொகையைக் கொடுக்க வேண்டியிருக்கும். அது மலிவானதாக இருக்காது, சுமார் ரிம1 மில்லியனுக்கு இருக்கும். மன்னிப்பு கேட்கும்படி கிளேரை கேட்டுக் கொண்டோம். அவர் மறுத்து விட்டார். நமக்கு 80 விழுக்காடு வெற்றி வாய்ப்பு இருப்பதாக லண்டன் வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர் என்று நேற்றிரவு திரங்கானுவில் நடந்த ஒரு செராமாவில் ஹாடி குறினார்.

நஜிப்பிடமிருந்து பாஸ் ரிம90 மில்லியனைப்ப் பெற்றுக்கொண்டதாக சரவாக் ரிபோர்ட் ஒரு கட்டுரையில் கூறியிருந்தது. எதிர்க்கட்சிகளின் வாக்குகளில் பிளவை உண்டாக்குவதற்காக நஜிப் மற்றும் அம்னோவுடன் ஹாடி இரகசிய உடன்படிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஹாடி இக்குற்றச்சாட்டை மறுத்து வந்துள்ளார்.