“வாழ்வின் எல்லை, தவறுகளை சரிசெய்ய முயல்வேன்”- கண்ணீர் மல்கும் காணொளியில் மகாதீர்!

ஒரு குறுகிய காணொளியில், இரண்டு குழந்தைகளுக்கு விளக்கம் தரும் வகையில் கண்கள் கலங்க, உரையாடும் முன்னாள் பிரதமர் மகாதீர், தான் எதற்காக இந்த அரசியல் மாற்றதிற்காக முன்வந்தார் என்பதை உணர்வுடன் காட்டுகிறது.

அய்சா என்ற சிறுமியும் அவளின் அண்ணன் அடாம் என்றவனும் மகாதீருடன் உரையாடும் வகையில் காட்சி அமைந்துள்ளது.

இன்னமும் வேலை செய்கிறீர்களா? என் வினவுகிறார் அய்சா

“மீண்டும் நாட்டை மேம்படுத்த வேண்டும், நான் கடந்த காலங்களில் செய்த தவறுகளால், தற்போது உள்ள நிலை, இதிலிருந்து நாட்டை மீட்டெடுக்க”, என்கிறார் மகாதீர்.

மெர்டேக்கா என்றால் என்பதற்கான விளக்கத்தை தறும் வகையில், தனது குரல் ததும்ப மகாதீர், “எனக்கு வயது 90-க்கும் அதிகமாகி விட்டது, இன்னமும் எஞ்சியுள்ள சொற்ப காலத்தில், நண்பர்களின் துணையுடன் நாட்டை நல்வழி படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முதல்வேன்”, என்கிறார்.

கண்ணீர் மல்கும் மகாதீரை அய்சா கட்டியணைக்கும் காட்சியுடன் காணோளி முடிகிறது. பின்னணியில், “இறுதி வணக்கம்” என்ற பிரபல பாடகர் சுடீர்மானின் பாடல் ஒலிக்கிறது.

இந்த காணொளியின் முழுமையானதை இங்கு காணலாம்.