வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்காக இசிமீது தியான் சுவா வழக்கு

பிகேஆர்   உதவித்    தலைவர்   தியான்  சுவா,    பத்து   நாடாளுமன்றத்   தொகுதி   வேட்பாளராக  போட்டியிடுவதைத்   தடுத்த   தேர்தல்    அதிகாரிக்கு    எதிராக    நீதிமன்றத்தில்   வழக்கு    தொடுத்துள்ளார்.

அரசமைப்பு     பகுதி 48(1)-இன்படி    பத்து   தொகுதியில்   போட்டியிடும்   தகுதி    தமக்குண்டு    என   நீதிமன்றம்  அறிவிக்க    வேண்டும்  என்று  தியான்  தம்  மனுவில்   கேட்டுக்கொண்டிருக்கிறார்   என   அவரின்   வழக்குரைஞர்   இங்கியாவ்   செள  இங்   கூறினார்.

தியான்  சுவா,   தேர்தல்    அதிகாரி   அன்வார்   முகம்மட்  ஜைன்னையும்  தேர்தல்   ஆணையத்தையும்     எதிர்வாதிகளாகக்  குறிப்பிட்டிருக்கிறார். சனிக்கிழமை   தியான்  சுவா   வேட்புமனு   தாக்கல்    செய்யச்   சென்றபோது  ஏற்கனவே     அவர்   நீதிமன்றத்தில்      ரிம2,000  அபராதம்   செலுத்தியிருப்பதைச்  சுட்டிக்காட்டி   அவரது   மனு   நிராகரிக்கப்பட்டது.