ஆயர் ஈத்தாம் நாடாளுமன்ற தொகுதியில் ஒரு பெரிய விளம்பரப் பலகையில் ஒட்டப்படிருந்த பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட்டின் படத்தை அமலாக்க அதிகாரிகள் ஒரு நிமிடத்தில் வெட்டி அகற்றினர்.
எங்களுடைய விளம்பரம் ஒட்டப்படும் பலகையில் மகாதிரின் படம் இருக்கக்கூடாது எங்களுக்கு கூறப்பட்டது. மகாதிரின் படத்தை விளம்பரம் ஒட்டும் பலகையிலிருந்து அகற்றுவது தேர்தல் ஆணையத்தின் முடிவு என்று ஹரப்பான் வேட்பாளர் லியு சின் தோங் கூறினார்.
படத்தை வெட்டி எடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திலிருந்து வந்தவர்களா அல்லது ஊராட்சிமன்றத்தைச் சேர்ந்தவர்களா என்பது என்பதை உறுதிப்பட்டுத்த முடியவில்லை.
மகாதிரின் படம் பொரிக்கப்பட்டுள்ள அட்டைகள் மற்றும் பதாகைகளிலிருந்து அவரின் படத்தை அகற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தமக்கு உத்தரவிட்டிருந்ததாக ஜோகூர் டிஎபி தலைவரான அவர் கூறினார்.
மதியம் அளவில், அமலாக்க அதிகாரிகள் அந்த விளம்பரப் பலகை அமைந்துள்ள ஜாலான் உத்தாமா 1, யோங் பெங், இடத்திற்கு வந்தனர். அந்த விளம்பரப் பலகையில் ஒட்டப்பட்டிருந்த படத்தில் மகாதிருடன் லியு மற்றும் யோங் பெங் சட்டமன்ற இருக்கைக்கான டிஎபி வேட்பாளர் சியு பெக் சூ ஆகியோர் காணப்பட்டனர்.
லியோ மற்றும் அவரது முழுவினரின் முன்னிலையில் வந்திருந்த அதிகாரிகள் மகாதிரின் படத்தை வெட்டி எடுத்தனர்.