பெரிய விளம்பரப் பலகைகளிலிருந்து மாகாதிரின் படம் அகற்றப்படுவது பற்றி எழும்பியுள்ள ஏகப்பட்ட குறைகூறல்களில் ஒன்றாக இருப்பது முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திமின் குறைகூறல்.
இன்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டரில் மகாதிருக்கு சட்டத்தின்முன் சமத்துவம் அளிக்கப்படவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
மசீசவின் 14 ஆவது பொதுத் தேர்தல் விளம்பரப் பலகையில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருடன் மசீசவின் தலைவர் இருக்கும் படத்தை தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது, ஆனால் மகாதிரின் படத்தைக் கிழித்தெறிகிறது என்று ரயிஸ் யாத்திம் கூறுகிறார்.
“இப்போது, மலேசியாவில் அதுதான் ‘நீதி’. தேர்தல் ஆணையத்தின் விதி எதுவாக இருந்தாலும், அரசமைப்புச் சட்டம் பிரிவு 8 இன் கீழ் அதை அடித்து வீழ்த்த வேண்டும்”, என்று அவர் பதிவு செய்துள்ளார்.
இன்று முன்னேரத்தில், ஜோகூர், ஆயர் ஈத்தாமில் ஒரு பெரிய விளம்பரப் பலகையில் பொரிக்கப்பட்டிருந்த மகாதிரின் படத்தை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இன்னொரு விளம்பரப் பலகையும் நெகிரி செம்பிலான், சிரம்பானில் அகற்றப்பட்டது.