தேர்தல் நியமன நாளன்று தேர்தல் ஆணையம் இழைத்தத் தவறை எதிர்வரும் புதன்கிழமைக்குள் திருத்திக்கொள்ள வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பானின் ரந்தாவ் சட்டமன்ற வேட்பாளர் டாக்டர் எஸ். ஶ்ரீராம் தேர்தல் ஆணையத்திற்கு அவரது வழக்குரைஞர் மூலம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு எதிராக பீனல் கோட் செக்சன் 124B மற்றும் 124C ஆகியவற்றின் கீழ் ஶ்ரீராம் இரு போலீஸ் புகார்கள் செய்துள்ளார்.
பிரச்சனையை உருவாக்கியது ஶ்ரீராம் அல்ல, அவர் செய்ய வேண்டிய அனைத்தையும் முறையே செய்துள்ளார். வேட்பாளர் வைப்புத் தொகையை புதன்கிழமையே கட்டி விட்டார்; பத்திரங்களை கேட்டுக்கொண்டுள்ளபடி பூர்த்தி செய்துள்ளார் என்று அவரது வழக்குரௌஞர் முகமட் ஹனிப் ஹாட்ரி தெரிவித்தார்.
தேர்தல் ஆணைய அட்டையை அணிந்திராதது ஒரு சட்ட மீறல் அல்ல, அதன் அடிப்படையில் அவரின் நியமனத்தை நிராகரிக்க முடியாது. அது ஒரு நடைமுறை மட்டுமே என்று முகமட் ஹனிப் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.