இராணுவத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்கான பாஸின் திட்டம்

 

பாஸ் கட்சியின் முன்னாள் படையினரின் விவகாரங்கள் அலுவலகத்தின் (கெராபாட்) தலைவர் முகமட் நாஸாரி மொக்தார் இராணுவப் படைகளின் உறுபினர்கள் பாஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பாஸ் அதிக அளவிலான முன்னாள் படையினரை தேர்தல் வேட்பாளர்களாக நிறுத்தி இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

பாஸ் முன்னாள் வீரர்களில் 10 பேரை நாடாளுமன்ற வேட்பாளர்களாகவும், 14 பேரை சட்டமன்ற வேட்பாளர்களாகவும் இந்தத் தேர்தலில் போட்டியிட பாஸ் தேர்வு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் 4 இராணுவ வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

போட்டியிட நிறுத்தப்பட்டுள்ளவர்களுக்கு முன்னாள் இராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் பணியிலிருக்கும் வீரர்கள் அவர்களின் ஆதரவை அளித்தால் அவர்களின் அபிலாட்சைகளை தேர்வு செய்யப்பட்ட முன்னாள் வீரர்கள் முன்னெடுப்பார்கள் என்று முகமட் நாஸாரி கூறினார்.

போட்டியில் நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் வீரர்கள் வெற்றி பெற்றால், அவர்கள் முன்னாள் படை வீரர்களின் நலன்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியும் என்று கெடா பாஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார்.

இதர அரசியல் கட்சிகள் அதிகமான முன்னாள் இராணுவ வீரர்களை தேர்தல் போட்டியிட நிறுத்தவில்லை என்று நம்புவதாக அவர் மேலும் கூறினார்.