14-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகும், ஜி.எஸ்.டி. ஆறு விழுக்காடாகவே இருக்கும் எனத் தற்காலிகப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் பிஎன் வென்றால், ஜி.எஸ்.டி. 9 விழுக்காடு உயரும் என்ற அவதூற்றை எதிர்க்கட்சிகள் பரப்பிவருவதாக அவர் கூறினார்.
“அவர்கள் விற்பனை, சேவை வரியை 10 + 6% (எஸ்.எஸ்.டி.) மீண்டும் கொண்டுவரவுள்ளதாக உறுதியளித்துள்ளனர். மே 9-ல், ஹராப்பானுக்கு வாக்களித்தால், மே 10-ம் தேதி அது நடைமுறைக்கு வரும். அவர்களைக் கேட்டுப்பாருங்கள்,” என்று அவர் தெரிவித்ததாக பெர்னாமா செய்திகள் கூறுகின்றன.
ஜி.எஸ்.டி. உயர்த்தப்படும் எனும் வதந்திகளை நம்ப வேண்டாம் என பாரிசான் தலைவருமான அவர்
மக்களைக் கேட்டுக்கொண்டார்.
நேற்று, மலாக்காவில் ஹராப்பான் தேர்தல் பிரச்சாரத்தில் விநியோகிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில், ஜி.எஸ்.டி. 9 விழுக்காடு வரை உயர்த்தப்படும் என்றும் அதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் என்றும் கூறப்பட்டிருந்தது.
ஹராப்பான் தனது தேர்தல் அறிக்கையில் ஜி.எஸ்.டி.-யை எடுத்துவிட்டு, எஸ்.எஸ்.டி.-யை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

























