இன்று தித்திவங்சா நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தேசா பாண்டானில் 1,500 க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்ற தேர்தல் கூட்டத்தில் பேசிய பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் தாம் இழைத்த ஒரு பெரிய தவறை ஒப்புக் கொண்டார்.
“எனது வாழ்க்கையின் மிகப் பெரிய தவறு நஜிப் அப்துல் ரசாக்கை (பிரதமராக) தேர்வு செய்தது.
“நான் இப்போது இந்தத் தவறை திருத்துவதற்காக கடுமையாக உழைக்கிறேன்”, என்று முன்னாள் பிரதமரான மகாதிர் கூறினார்.
மழைத் தூறலில் நனைந்து போய் நின்ற கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து “எங்களுக்கு துன் வேண்டும், நாங்கள் துன்னை நேசிக்கிறோம், துன் நீடூழி வாழ்ச்க” என்று பாடினர்.
பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் ரீனா ஹருன் தித்திவங்சா நாடாளுமன்ற தொகுதியில் அம்னோ உறுப்பினரும் பராமரிப்பு அரசின் நிதி அமைச்சருமான ஜோஹாரி அப்துல் கனியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
பாஸ் கட்சியின் முகமட் நூர் முகமட்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

























