பத்து-வில் முன்னாள் மஇகா தலைவர் ஹரப்பானுடன் ஒத்துழைக்கத் தயார்

பத்து   நாடாளுமன்றத்    தொகுதியில்   சுயேச்சை   வேட்பாளராக    போட்டியிடும்  வி.எம். பஞ்சமூர்த்தி  தேர்தலில்   பக்கத்தான்  ஹரப்பான்      ஆதரவளித்தால்   அதை  வரவேற்பதாகக்   கூறினார்.

பிகேஆர்  உதவித்   தலைவர்    தியான்   சுவா   அல்லது   ஹரப்பான்     தலைவர்களின்  வார்த்தைக்காக  அவர்    காத்திருக்கிறார். அவர்கள்   ஆதரவளிப்பதாக  வெளிப்படையாக     அறிவிக்க    வேண்டும்  என்று   பஞ்சமூர்த்தி   மலேசியாகினியிடம்   கூறினார்.

இரண்டு   தவணை   பத்து   தொகுதி   எம்பியாக   இருந்துள்ள   தியான்   சுவா  நீதிமன்ற  விவகாரம்  காரணமாக   இம்முறை,   வேட்பாளர்   நியமன    நாளன்று,    தேர்தலில்  போட்டியிட   அனுமதி   மறுக்கப்பட்டது.

தேர்தல்   ஆணைய  முடிவை    எதிர்த்து   அவர்    வழக்கு   தொடுத்துள்ளார். வழக்குச்   சாதகமாக   இல்லை   என்றால்   வேறொரு   வேட்பாளரை    ஆதரிக்கப்  போவதாக     திங்கள்கிழமை    அவர்   தெரிவித்திருந்தார்.

பத்து   தொகுதியில்   இப்போது  நான்கு  முனை    போட்டி   நிலவுகிறது.  பரஞ்சோதி,   பிஎன்னின்   டொமினிக்  லாவ், பாஸின்  அஸ்ஹார்   யாஹ்யா,  இன்னொரு  சுயேச்சை  வேட்பாளர்  எம்.  பிரபாகரன்    ஆகியோர்  அங்கு  களமிறங்குகின்றனர்.

பிகேஆர்    தலைவர்கள்   சுயேச்சை   வேட்பாளர்களைத்   தொடர்பு   கொண்டிருப்பதாகக்  கூறப்படுகிறது.  ஆனால்,  பரஞ்சோதி    அது   குறித்துக்   கருத்துரைக்க    மறுத்தார்.