‘ஞாயிறு’ நக்கீரன், மே 2, 2018. எளிதில்எட்டிப் பறிக்கும் அளவுக்கு இருந்த மாங்கனியை போல் பத்து தொகுதி பறிக்கப்பட்டது ஜனநாயாக அரசியலுக்கு கிடைத்த சாட்டையடியாகும்.
கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தில் தேசிய முன்னணியின் கோட்டையாக இருந்த இந்தத் தொகுதியில் கடந்த இரு பொதுத் தேர்தலிகளிலும் களம் கண்டு வெற்றி கொண்ட நம்பிக்கைக் கூட்டணி, தேசிய முன்னணி அரசாங்கம் நியமித்த தேர்தல் அதிகாரி வழி இழந்தது.
தேர்தல் ஆணையமும் கெடுபிடியுடன் நடந்து கொள்ளலாம் என்ற ஊகத் தகவல் நிலவி வந்த நிலையில், ஷாலாம் நீதி மன்றத்தில் 2,000/= வெள்ளி அபராதம் கட்டிய நிலையில், தியான் சுவா விழிப்பாக இருந்தும், சதி வென்றது.
தேர்தலில் வேட்பாளராக நிற்பவர்கள் குற்றம் புரிந்தவர்களாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் நமது அரசமைப்பு சட்டம் எந்தவொரு நபரும் நீதிமன்றத்தால் ரிம. 2000க்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஆறு மாதம் சிறைதண்டனை வழங்கப்பட்டிருந்தாலோ தண்டனை பெற்ற நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் பங்கெடுக்கும் தகுதியை இழப்பர்.
தியான்சுவா அவர்கள் மார்ச்சு 2013ஆம் ஆண்டு ஷாலாம் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளித்து ரிம. 5000 அபராதம் விதித்தது. இந்த தொகை மேல் முறையீட்டின் போது ரிம. 2000 க்கு குறைக்கப்பட்டது.
மேலும் நாடாளுமன்றத்தில் இந்த தண்டனை சார்பாக கருத்துரைத்த சபாநாயகர் தியான்சுவா தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு சட்டம் அனுமதிப்பதாக கூறியிருந்தார்.
மேலும் இதற்கு முன்பு நீதிமன்ற வழக்குகளும் ரிம. 2001 அல்லது 2001க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த தேர்தலில் பங்கெடுக்கும் தகுதியை இழப்பர்.
தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஒரு மாபெரும் அரசியல் சதியாகும் என்று தியான் சுவாவின் வழக்கறிஞர்கள் வன்மையாக சாடுகிறார்கள்.