பணத்தை வாரி வழங்கும் சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால்

 

சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் இத்தேர்தலில் ஒரு வேட்பாளர் அல்லர். ஆனால், அவர் அனைத்துக் கூட்டங்களிலும் கலந்துகொள்கிறார், அனல் கக்கும் உரை நிகழ்த்துகிறார், பை நிறையப் பணம் வைத்திருக்கிறார்.

நேற்றிரவு, மலாய் சுங்கை லெமான் பென்டாங் உத்தாரா கிராமத்தில் நூறு பேர் இருந்த ஒரு கூட்டத்திற்கு பாரிசான் செகின்சான் வேட்பாளர் லீ யீ யுவானுடன் ஜமாவ் வந்தார். லீ பேசி முடிந்தவுடன் அங்கிருந்து போய் விட்டார். ஜமால் கூட்டத்தை தொடர்ந்து நடத்தினார்.

மாற்றம் வேண்டும் என்று கூறும் எதிர்க்கட்சிகளின் வார்த்தைகளால் ஏமாந்து விடாதீர்கள். நல்ல இராணுவ வீரர்களைப் போல் பிஎன்னுடன் உறுதியாக இருங்கள் என்று ஜமால் அங்கிருந்தவரிகளிடம் கூறினார்.

நாம் இராணுவ வீரர்களைப் போன்றவர்கள். நமது தொடர்ந்து பிஎன்னாலும் நஜிப்பாலும் ஆட்சி செய்யப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றாரவர்.

அவர் பேசிய பின்னர், அங்கிருந்தவர்களை ‘ஹீடுப் பாரிசான்’ என்று உரக்கப் பாடச் சொன்னார்.

அதனைத் தொடர்ந்து, ஜமால், “ஐம்பது ரிங்கிட், எடுங்கள் எனது பையை”, என்றார். அதன் பின்னர், அவர் அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் ரிம50-ஐ கொடுத்தார்.

தான் கட்சி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்தேன். வாக்குகளை வாங்கவில்லை என்று ஜமால் மலேசியாகினியிடம் கூறினார்.

“அவர்கள் எங்கள் இயந்திரத்தின் ஒரு பாகம். அவர்கள் கொடிகள் மற்றும் தோரணங்களைக் கட்டினர். இங்குள்ள தலைவர் என்ற முறையில், நான் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது, இலஞ்சம் அல்ல”, என்று மேலும் கூறினார்.