அம்னோவை வெளியேற்றுங்கள் என்று லெம்பா பந்தாய் வாக்காளர்களை இன்றிரவு முன்னாள் நிதி அமைச்சர் டைம் ஸைனுடின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். அவர் பராமரிப்பு அரசின் பிரதமர் நஜிப்பின் துணைவியையும் சாடினார்.
“பிஎன்-னுக்கு வாக்களிப்பது அவருடைய மனைவிக்கு அளிக்கும் வாக்காகும், அந்த மனைவி நஜிப்பின் மனைவியாகும்.
“வாக்களிப்பு நாளாக ராபுவை (புதன்கிழமையை) தேர்வு செய்ததற்காக நான் நஜிப்புக்கு நன்றி கூறுகிறேன், ஏனென்றால் அது (Rakyat Akan Buang Umno) மக்கள் அம்னோவை அகற்றுவார்கள் என்ற பொருள் குறிக்கிறது.
“மே 9 அன்று, ராபுவை மறந்து விடாதீர்கள், வாருங்கள் அம்னோவை அகற்றுவோம்”, என்று டைம் அங்கு குழுமியிருந்த 150க்கும் மேற்பட்டோரிடம் கூறினார்.
பொருள்கள் மற்றும் சேவைகள் வரியையும் (ஜிஎஸ்டி) அவர் சாடினார். 1990களில் அவர் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் அவ்வாறான வரியை விதிக்கவே இல்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
பக்கத்தான் ஹரப்பானின் லெம்பா பந்தாய் வேட்பாளர் ஃப்பாமி ஃபாட்ஸிலுக்கு அவர் ஆதரவளிக்க வாக்குறுதி அளித்தார்.