டயிம்: தேவை பொருளாதாரம் மீது நஜிப்- மகாதிர் விவாதம்

பிஎன்   தலைவர்   நஜிப்   அப்துல்   ரசாக்கும்   பக்கத்தான்   ஹரப்பான்   தலைவர்  டாக்டர்    மகாதிர்   முகம்மட்டும்   பொருளாதார,  நிதி   விவகாரங்கள்மீது  விவாதமிட   வேண்டும்   என்கிறார்   முன்னாள்  நிதி   அமைச்சர்   டயிம்   சைனுடின்.

அது  நடக்காது    என்றால்   அவர்களின்   பிரதிநிதிகளாவது   பொது   விவாதத்தில்   ஈடுபட    வேண்டும்.

அது   வாக்காளர்கள்  யாரைத்   தேர்ந்தெடுப்பது   என்பதை   முடிவு    செய்ய   உதவியாக    இருக்கும்  என  நன்யாங்   சியாங்   பாவுக்கு   அளித்த   நேர்காணலில்   டயிம்  கூறினார்.

“மக்கள்   அவ்விருவரும்   வாதமிடுவதைக்  காண    விரும்புவார்கள்”,  என்றாரவர்.

வாழ்க்கைச்   செலவின   விவகாரங்களைச்   சமாளிக்க  முடியாமல்   பிஎன்   திணறுகிறது.  இந்த   வாய்ப்பைப்  பயன்படுத்திக்கொண்டு   பணவீக்கத்துக்கு   1எம்டிபியை   புத்ரா  ஜெயா   சரியான  முறையில்   கையாளத்    தவறியதுதான்   காரணம்   என்று   எதிரணியினர்   குற்றம்   சாட்டுகின்றனர்.

சிங்கப்பூரைவிட   நம்   நாட்டில்    வாழ்க்கைச்   செலவினம்   குறைவு   என்று  பிஎன் தலைவர்கள்   வாக்காளர்களிடம்    சொல்லி   வருகிறார்கள்.   ஆனால்,  அதனாலெல்லாம்  வாக்காளர்களைச்   சமாதானப்படுத்தத்   தயாராக   இல்லை.

“கிராமப்புறத்தில்   உள்ளவர்கள்   ஜிஎஸ்டி   பற்றி  முறையிடுகிறார்கள்….ஒரு  கம்பத்துக்குப்   போய்   பணவீக்கம்   மூன்று   விழுக்காடுதான்    என்று   சொல்லிப்    பாருங்கள்,  விரட்டி    அடிப்பார்கள்”,  என்று   டயிம்  கூறினார்.