கெடாவில் தொங்கு சட்டமன்றம் என்ற நிலை ஏற்படுமானால் மாநில பாஸ் , அதன் இஸ்லாமியக் கோட்பாடுகளை எந்தக் கட்சி ஏற்றுக்கொள்கிறதோ அதனுடன் சேர்ந்து அரசாங்கம் அமைக்கத் தயாராக உள்ளது. சுங்கை லீமாவ் சட்டமன்ற வேட்பாளர் முகம்மட் அப்ட் சமட் இதனைத் தெரிவித்தார்.
பாஸுடன் ஒத்துழைப்பு தேவை என்றால் இது ஒரு முன்நிபந்தனை என்பதைக் கட்சித் தலைவர்கள் நெடுகிலும் சொல்லி வந்துள்ளனர் என்றாரவர்.
“இந்த விசயத்தில் கட்சித் தலைமை அதன் கொள்கை, கோட்பாடுகளில் தெளிவாக உள்ளது. பாஸின் இஸ்லாமியக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். முடியாது என்றால் பக்கத்தான் ஹரப்பானும் பிஎன்னும் சேர்ந்து அரசாங்கம் அமைக்கலாம்”, என்று கெடா கோத்தா சராங்கில், பாஸ் தலைமையகத்தில் அவர் கூறினார்.