ஊடகச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை ஹரப்பான் அகற்றும், வான் அசிஸா

 

14 ஆவது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால் ஊடகச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் அனைத்து சட்டங்களையும் அதிகாரக் கட்டளைகளையும் மறுபரிசீலனை செய்யும் என்று அதன் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் கூறினார்.

உலக பத்திரிக்கை சுதந்திரம் நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் பேச்சு சுதந்திரத்தை மதித்து அதை நிலைநிறுத்தும் கடப்பாடு பராமரிப்பு அரசாங்கத்திற்கு இருப்பதை அவர் அதற்கு நினைவூட்டினார்.

ஊடகச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் பல சட்டங்களைச் சுட்டிக் காட்டிய அவர், புதிய பொய்ச் செய்தி எதிர்ப்புச் சட்டம் 2018 ஊடகச் சுதந்திரத்தை மேலும் கட்டுப்பட்டுத்துவதாக அவர் கூறினார்.

உலகிலேயே இம்மாதிரியான ஒரு சட்டத்தை இயற்றி அச்சட்டத்தின் கீழ் ஒரு தனிப்பட்ட நபருக்கு எதிராக வழக்குத் தொடுக்கும் முதல் நாடு நமது நாடுதான் என்று அவர் மேலும் கூறினார்.

பத்திரிக்கை சுதந்திரம் மற்று பேச்சு சுதந்திரம் ஆகியவை ஒரு ஜனநாயக நாட்டின் மிக அவசியாமான கூறுகள். ஆகவே, பத்திரிக்கை சுதந்திரம் மற்று பேச்சு சுதந்திரம் ஆகியவற்றைக் கொண்ட உலகின் முதல் பத்து நாடுகளில் மலேசியா ஒன்றாக இருப்பதை உறுதி செய்யும் ஈடுபாட்டை பக்கத்தான் ஹரப்பான் கொண்டிருப்பதாக வான் அசிஸா தெரிவித்தார்.