பெரும் மாற்றங்களைக் காணும் ரயிஸ், ஊழல் தலைவர்கள் தலைமை ஏற்கக்கூடாது என்கிறார்

 

பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் பங்கேற்கும் பேரணிகளிலிருந்து வாக்காளர்களின் மனப்பாங்கில் பெரும் மாற்றம் இருப்பதைக் காண முடிகிறது என்று முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம் மலேசியாகினியிடம் கூறினார்.

நியாயமான மற்றும் நேர்மையான சட்டங்கள் மீது தமக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதை வலியுறுத்திய அவர், ஊழல் மற்றும் கரைபடிந்த தலைவர்கள் நாட்டின் தலைமைத்துவத்தில் இருக்கக்கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

“நான் ஆணவம் கொண்ட குட்டி நெப்போலியன்களையும்கூட எதிர்க்கிறேன்”, என்றாரவர்.

தற்போதைய அம்னோ தலைமைத்துவம் ரயிஸின் குறைகூறல்களைக் கண்டித்துளளது. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இன்னொரு முன்னாள் அமைச்சர் ரபிடா அசிஸ் இன்னும் ஒரு படி மேலே சென்றுள்ளார். அவர் பிஎன் ஆட்சிக்கு முடிவு கட்டி கடிவாளத்தை ஹரப்பானிடம் கொடுக்கும்படி வாக்காளர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்தையும் ரயிஸ் சாடினார். அந்த ஆணையம் அதன் சேவை உடையை மாற்றிக்கொள்ள வேண்டும். அதன் ஆணவப் போக்கை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றாரவர்.