14வது பொதுத் தேர்தலில் வாக்களிப்புக்கு இன்னும் மூன்று நாள் இருக்கும் வேளையில் பாரிசான் நேசனல் மிகப் பெரிய வெற்றி பெறப்போகிறது என்று நஜிப் அப்துல் ரசாக் நேற்றிரவு கூறினார்.
நாட்டைச் சுற்றி வந்ததிலிருந்தும் ஆங்காங்கே அம்னோ தலைவர்கள் அளித்த விளக்கங்களிலிருந்தும் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் கூறினார்.
நேற்று காலை பினாங்கு சென்று கப்பளா பத்தாஸ், தாசேக் குளுகோர் ஆகியவற்றின் பிஎன் தலைவர்களையும் அவர் சந்தித்தார்.
அம்மாநிலத்தில் பிஎன் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் தக்க வைத்துக்கொள்ளும் என்று நம்புவதாக அவர் சொன்னார்.
“அதன் பின்னர் சுங்கை சிப்புட் சென்றேன். அங்கு மண்டபம் நிறைந்த கூட்டம். மக்கள் அமர்வதற்கு நாற்காலிகள்கூட போதவில்லை. சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை எதிரணியிடமிருந்து கைப்பற்றும் வாய்ப்பிருப்பதாகக் கூறினார்கள்.
“இன்ஷா அல்லாஹ், அப்படி நடந்து இப்போது நம் கைவசமுள்ள இடங்களைத் தக்க வைத்துக்கொள்ள முடிந்தால் பெரிய வெற்றியைப் பெற முடியும்”, என நஜிப் பெரமு ஜெயாவில் மக்களைச் சந்திக்கும் நிகழ்வில் கூறினார்.